விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக இருந்த சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் தள்ளிப்போகிறது!
நந்தலாலா படத்தில் பிஸியாக இருக்கும் மிஷ்கின், இதில் நாயகனாக நடிக்கிறார். இதற்காக தனது தொண்ணூறு கிலோ உடம்பை ஊண் இன்றி துரும்பாக இளைக்க விட்டுள்ளார்.
இந்தப் படம் முடிந்ததும் அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தின் கதையை சூர்யாவிடம் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டார் மிஷ்கின்.
சூர்யாவை இயக்குவதால் விஷாலை வைத்து இயக்குவதாக இருந்த சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.