முன்னணி இந்திப்பட நடிகர்களுடன் நடிக்கவே ஆயிரம் நிபந்தனைகள் விதிப்பவர் வித்யாபாலன். அப்படிப்பட்டவர் தனது கல்லூரி தோழிக்காக குறும்படம் ஒன்றில் காசு வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
வித்யாபாலனின் நட்புக்கு மரியாதையைப் பார்த்து நம்மூர்¨ நட்ராஜும் வித்யாபாலனுக்கு தூண்டில் போட்டிருக்கிறார்.
சக்கர வியூகம் படத்திற்குப் பிறகு முழு நிலவு என்ற படத்தில் நடிக்கிறார் நட்ராஜ். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இந்திப் படங்களில் பணிபுரிந்தபோது வித்யாபாலனுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பின் நெருக்கத்தில் முழு நிலவு படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனை கேட்டிருக்கிறார் நட்ராஜ்.
தோழிக்காக காசு வாங்காமல் நடித்தவர், தோழினின் கோரிக்கையை மட்டும் தள்ளுபடி செய்வாரா என்ன?
முழு நிலவு வித்யாபாலனின் தலையசைப்பிற்காக காத்திருக்கிறது!