Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா வெடித்த பாலியல் வேட்டு!

Advertiesment
நயன்தாரா வெடித்த பாலியல் வேட்டு!
, புதன், 7 மே 2008 (18:23 IST)
webdunia photoWD
ஐபிஎல்-ன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர் பதவியிலிரு‌ந்து தூக்கப்பட்டார் அல்லவா நயன்தாரா? அதற்கு ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சியில் காரணம் ஒன்றை கூறியிருக்கிறார் நயன்.

நியாயமான காரணங்கள் இருந்தால் போட்டி நடக்கும்போது அதில் பங்குபெறாமல் இருக்கலாம் என்பது நயன்தாரா மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் ஒரு விதியாம். சென்னை கிங்ஸ் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் விளையாடியதற்கு முந்தைய தினம் மருத்துவமனையில் இருந்தாராம் நயன்தாரா. இது தெரிந்தும் தன்னை தூதர் பதவியிலிருந்து தூக்கிவிட்டனர் என்பது நயனின் குற்றச்சாட்டு.

சென்னை கிங்ஸின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் சிலர் என்னிடம் வேறு சிலவற்றை எதிர்பார்த்தார்கள். ஒரு நடிகையான எனக்கு அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது தெரியும். நான் அப்படிப்பட்ட ஆளில்லை என்று ஆவேசமாக கூறியிருப்பவர், எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்ததே என்னை நீக்கியதற்கு காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

நயன்தாராவின் பேச்சால் குளிரடித்துப் போயுள்ளனர் கிங்ஸ் நிர்வாகிகள்!

Share this Story:

Follow Webdunia tamil