சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாணி வித்யாலயா மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகத்தில் பிறந்த நாள் கொண்டாடினார் நடிகை லட்சுமி ராய்.
சென்ற வருடம் நட்சத்திர ஹோட்டலில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடினாராம். அதில் கிடைக்காத திருப்தி இந்த முறை கிடைத்ததாக புளங்காகிதம் அடைந்தார் இந்த தாம் தூம் நாயகி.
லட்சுமி ராய்க்கு அவரது பெற்றோர்கள் பத்தொன்பது பூக்களைப் பரிசாக அளித்தார்கள். ராய்க்கு இது பத்தொன்பதாவது பிறந்த நாளாம். அதுதான் பத்தொன்பது பூக்கள். பூவுக்கேற்ற பரிசுதான்!
இதுவரை நான் நடித்த படங்களின் கதைகள் சரியில்லை. ஆனால் இந்த வருடம் வெளியாகும் எனது எல்லாப் படங்களும் சிறப்பாக இருக்கும் என்றார் லட்சுமி ராய்.
தேவதைகள் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்!