Publish Date: Wed, 07 May 2008 (13:33 IST)
Updated Date: Wed, 07 May 2008 (13:33 IST)
எல்லோரும் ஆச்சரியத்துடன் அதையேதான் பார்க்கிறார்கள், அதையேதான் பேசுகிறார்கள். டோட்டல் தமிழ்நாட்டையே மிரட்டிக்கொண்டிருக்கும் அந்த விடயம், நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம்.
அமுல்பேபி போலிக்கும் சூர்யா சட்டையைக் கழற்றினால் அர்னால்ட் போலிருக்கிறார். தசைகள் இறுகி இரும்பாகியிருக்கிறது உடம்பு. வயிற்றில் மட்டும் ஆறு 'அப்ஸ்'கள். இது எப்படிச் சாத்தியம்?
வாரணம் ஆயிரம் படத்தில் சின்ன வயதில் இருந்து வயதானவர் வரை பல கெட்டப்புகளில் வருகிறார் சூர்யா. இளவயது சூர்யாவிற்கு இதில் பாடிபில்டர் வேடமாம். கதையைக் கேட்டதும் ஜிம்முக்குப் போய்ச் சட்டையைக் கழற்றியவர்தான். உடற்பயிற்சியில் ஊறிப்போனவர் உடம்பு இரும்பான பிறகே போட்டோவுக்குப் போஸ் கொடுத்திருக்கிறார்.
சூர்யாவின் புதிய தோற்றத்தைப் பார்த்த அமீர்கான், அவரிடம் உடற்பயிற்சி முறைகள் மற்றும் சூர்யாவின் டயட் ஆகியவற்றை அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.
பஞ்ச் டயலாக்கை நம்பிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் சூர்யாவிடம் பாடம் கற்க வேண்டும்.