அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு அறை எண் 305ல் கடவுள் சிறந்த உதாரணம்.
இம்சை அரசன் போல அறை எண்ணும் தறிகெட்டு ஓடும் என நினைத்தார் படத்தைத் தயாரித்த இயக்குநர் ஷங்கர். அதனால் எட்டு கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் படத்தைக் கேட்டும், கொடுக்காமல் சொந்தமாக வெளியிட்டார். அதுதான் சங்கர் செய்த தவறு.
நாலு வாரம் முடியும் முன்பே நாலாத் திசைகளில் இருந்தும் பெட்டிகள் அறைக்குத் திரும்பத் தொடங்கிவிட்டன. படத்தை பூஸ்ட் செய்ய தனது சிஷ்யர்கள், நலம் விரும்பிகளிடம் கடிதம் வாங்கி அதையும் பத்திரிகைகளில் பிரசுரித்துப் பார்த்தனர். நமத்துப்போன பட்டாசு அப்படியும் வெடிக்கவில்லை.
கடவுள் கைவிட்டதால் கடுப்பில் இருக்கிறது ஷங்கரின் தயாரிப்பு நிறுவனம்.