அடுத்த மாதம் தனது சரித்திரம் படத்தைத் தொடங்குகிறார் இயக்குநர் சாமி. படம் இயக்குவதற்குச் சாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் சரித்திரம் வேலைகள் சுறுசுறுப்படைந்து உள்ளன.
மிருகம் படப்பிடிப்பில் நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்ததற்காக சாமிக்குப் படம் இயக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. ஆறு மாதம் கழிந்த பிறகு தன் மீதான தடையை நீக்கும்படி இயக்குநர்கள் சங்கத்திற்குக் கடிதம் எழுதினார் சாமி. தான் சரித்திரம் படத்தை உடனே தொடங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பிரச்சனையைப் பரிசீலித்த திரையுலக நடவடிக்கைக் குழு, சாமி மீதான தடையை விலக்கிக் கொண்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்,
ஆறு மாத காலம் படம் இயக்காமல் இருந்ததே போதும். மேலும் படப்பிடிப்பை சாமி தொடங்கினால் சினிமா தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
தடை நீக்கம் குறித்து பத்மப்ரியாவிடம் திரையுலக நடவடிக்கைக் குழு கருத்து எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.