இந்து முன்னணியினருக்கு இது திருவிழாக் காலம். என்ன செய்வதென்று திண்ணையில் தூங்கிக் கழித்தவர்களின் திருவோட்டில் பிரசாதமாக விழுந்திருக்கிறது தசாவதாரம்.
பதினாறாம் நூற்றாண்டில் சைவ, வைணவ மோதல் உச்சத்தில் இருந்தது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். எழுத்தாளர் கல்கியும் இந்த மோதலைப் பதிவு செய்துள்ளார். அதையேதான் தசாவதாரத்தில் செய்திருக்கிறார் கமல். ஆனால், திண்ணை தூங்கிகளுக்கு அது தேள் கொட்டியது போலாகிவிட்டது.
இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், படத்தைத் தடுப்போம் தியேட்டரைத் தகர்ப்போம் என்றெல்லாம் வழக்கமான தனது பூச்சாண்டியைக் காட்டியிருக்கிறார். கமல் இதற்கெல்லாம் கவலைப்படப் போவதில்லை. காசு போட்ட தயாரிப்பாளரும் கமல்போல இருக்க முடியுமா?
"பிரச்சனைக்குரிய எந்தக் காட்சியும் தசாவதாரத்தில் இல்லை. கடவுளை நம்பும் ஒவ்வொருவரையும் இந்தப்படம் கவரும்" என்று விளக்கமளித்துள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இந்த விளக்கத்திற்குப் பிறகும் அடங்குவதாக இல்லை காவிக்கூட்டம். தசாவதாரத்தின் வருகையை ரசிகர்களைவிட விஷமிகள்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.