படம் வெளியாகவில்லை, அதற்குள் கலெக்சனா? ஆச்சரியம் வேண்டாம். இது ஏரியா விற்பனை கலெக்சன்.
தசாவதாரம் பட்ஜெட் ஐம்பது கோடி. அத்தனையும் பட ரிலீசுக்க முன்பே கலெக்சனாகிவிடும் என்கிறார்கள் தசாவதாரம் விற்பனை விவரம் அறிந்தவர்கள்.
ஆடியோ மற்றும் சாட்டிலைட் உரிமை மட்டுமே ஆறு கோடியாம். என்.எஸ்.சி. எனப்படும் நார்த் செளத் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை சிட்டி ரைட்ஸ் பதினைந்து கோடி. கோயம்புத்தூர் மட்டும் நான்கு கோடி. மதுரை 3, சேலம் இரண்டரை என்று எல்லா ஏரியாவும் பிரமாண்ட சேல்ஸ்.
இந்தி மொழி உரிமை மட்டும் பன்னிரெண்டு கோடியாம். இதுதவிர கேரளா, கர்நாடகா, தெலுங்கு என பல கோடிகள்.
வெளியாகும் முன்பே தயாரிப்பாளரை காப்பாற்றியிருக்கிறது தசாவதாரம். விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ரட்சிக்கப்படுவார்களா?
படம் திரைக்கு வந்த பின்புதான் தெரியும்!