Publish Date: Mon, 05 May 2008 (20:56 IST)
Updated Date: Mon, 05 May 2008 (20:55 IST)
கடைசியாக இயக்கிய வட்டாரம் ·பிளாப். தயாரித்த இரு படங்களும் தோல்வி. உடனிருந்த நண்பனுடன் மோதல். கொஞ்ச நாளாக சரணுக்கு பிரச்சனைகள்தான் தோழன்.
சொந்தமாக கட்டிய வீட்டை விற்று கடன் எனும் கடலிலிருந்து கரையேறியவர், இப்போதுதான் தனது புதிய படம், மோதி விளையாடு கதை விவாதத்தை தொடங்கினார். அதற்குள் இன்னொரு அஸ்திரம்.
படத் தயாரிப்புக்காக ஐம்பது லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் சரண். அதற்கு கொடுத்த செக் சரணின் கணக்கில் திரும்பி வந்திருக்கிறது. கடன் கொடுத்தவர் வழக்கு தொடர, கோர்ட்டில் ஆஜராகும்படி சரணுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தப் புதிய பிரச்சனையால் மோதி விளையாடு படத்துக்கு எந்த பக்க விளைவும் ஏற்படக்கூடாது என்பதுதான் சரணின் நலம் விரும்பிகளின் பிரார்த்தனை.