Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவ்தீப் - மீண்டும் நாயகன்!

Advertiesment
நவ்தீப் - மீண்டும் நாயகன்!
, திங்கள், 5 மே 2008 (20:54 IST)
நவ்தீப்பிற்கு 2008 நல்லபடியாக தொடங்கியிருக்கிறது. சென்ற வருடம் சும்மா இருந்தவருக்கு ஏகனில் அஜித்தின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது மேலுமொரு வாய்ப்பு.

ஏவி.எம். புரொக்சன்ஸ் சார்பில் ஏ.வி.எம்.குமரன் தயாரிக்கும் அ ஆ இ ஈ படத்தில் நவ்தீப்தான் நாயகன். இவருக்கு ஜோடி மோனிகா.

சிலந்தியில் கவர்ச்சியாக நடித்த பிறகு மோனிகாவை ஈ போல மொய்க்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்தப் படம் தவிர அகராதி என்ற படத்திலும் மோனிகாதான் நாயகி.

தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கிய சந்தமாமா படத்தை தான் அஆஇஈ என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார்கள். வி.ஐ.பி. படத்தை இயக்கிய சபாபதி இதனை இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

இரண்டு ஹீரோக்களில் ஒருவர், ஹீரோவின் தம்பி என இறங்கு முகத்தில் இருநூத நவ்தீப்பிற்கு இந்த நான்கெழுத்து உயிரெழுத்துப் படம் மீண்டும் நாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil