விஜய் தொலைக்காட்சி சார்பில் 2007 ஆம் ஆண்டிற்கான விஜய் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விருது வழங்கும் விழாவை யூகி சேது தொகுத்து வழங்கினார். விருதுகளின் விவரம் வருமாறு:
சிறந்த சண்டை பயிற்சி இயக்குநர்- ராம்போ ராஜ் குமார் (பொல்லாதவன்)
சிறந்த நடன இயக்குநர் - தினேஷ்
சிறந்த கலை இயக்குநர்- தோட்டாதரணி படம் (சிவாஜி)
சிறந்த படத்தொகுப்பாளர்- ஸ்ரீகர் பிரசாத் (கற்றது தமிழ்)
சிறந்த ஒளிப்பதிவாளர்- வேல்ராஜ் (பொல்லாதவன்)
சிறந்த பாடலாசிரியர்- நா.முத்துகுமார் (சிவாஜி)
சிறந்த பின்னணிப் பாடகி- மேகா தாசின் (சத்தம் போடாதே)
சிறந்த பின்னணிப் பாடகர்- கிரிஸ் (உன்னாலே உன்னாலே)
சிறந்த வில்லன்- கிஷோர் (பொல்லாதவன்)
சிறந்த புதுமுக நடிகை- அஞ்சலி (கற்றது தமிழ்)
சிறந்த புதுமுக நடிகர்- கார்த்தி (பருத்தி வீரன்)
சிறந்த வசனகர்த்தா- விஜி (மொழி)
சிறந்த இயக்குநர்- வெற்றிமாறன் (பொல்லாதவன்)
சிறந்த நடிகை- ப்ரியாமணி (பருத்தி வீரன்)
சிறந்த நடிகர்- சத்யராஜ்
சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்
சிறந்த ஜனரஞ்சக நடிகர்- விஜய்
இந்நிகழ்ச்சியில், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாதனையைப் பாராட்டி விஜய் டி.வி. சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை நகைச்சுவை நடிகை மனோரமா வழங்கினார்.
இவ்விழாவில் இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், பாலுமகேந்திரா, சுந்தர் சி, பேரரசு, விஜி, நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, லட்சுமி ராய், மனோரமா, நடிகர்கள் பிரபு, ஜீவா, தனுஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.