"ரகுவண்ணன் என்னை காதலித்து மணந்து கொண்டார். இப்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்" என துணை இயக்குனர் ஸ்டெஃபி போலிஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்ததன்பேரில் ரகுவண்ணனிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின்போது, "ஸ்டெஃபியும் நானும் இரண்டு மாதத்துக்கு முன்புதான் நேரில் சந்தித்துக் கொண்டோம். நண்பர்களாகத்தான் பழகினோம். நாங்கள் பலமுறை தனியாக இருந்துள்ளோம். அப்போது அவர் எனக்கு மது கொடுத்துள்ளார். மதுவில் மயக்க மருநூது மற்றும் போதைப் பொருளை கலந்து கொடுத்துள்ளார்.
அதனால் அப்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. என்னை தன்னோடு நெருக்கமாய் இருப்பதுபோல் ஃபோட்டோ எடுத்துவிட்டு அதைக்காட்டி என்னை மிரட்டுகிறார். நான் அவருடன் ஒரு முறைகூட பாலியல் உறவு வைத்துக் கொண்டது இல்லை. எந்த சோதனைக்கும் நான் தயார்" என்கிறார் ஏதுமறியாதவராய்.
இதுவரை வழக்குப் பதிவு செய்யாத நிலையில் போலீசார் விசாரணை மட்டுமே தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.