நீண்ட நாட்களாக வனவாசமிருந்த முரளி 'எங்க ராசி நல்ல ராசி' படத்தில் கதாநாயகனாக வேஷம் கட்டுகிறார்.
முழு நீள காமெடிப் படமான இதில், எஸ்.வி. சேகர் கம்பெனியில் வேலை செய்பவர்களாக முரளியும், விஷ்வாவும் நடிக்கிறார்கள். தனது கம்பெனியை இவ்விருவரில் யார் வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறாரோ அவருக்கு தன் பெண்ணை கல்யாணம் செய்து தருவதாக எஸ்.வி. சேகர் கூறுகிறார்.
மகளாக நடிக்கும் சாருலதாவோ இரண்டு பேரையுமே கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று போராட(?) என்னவாகிறது முடிவு என்பதுதான் கதையாம்.
நல்ல வேளை காமெடிக் கதை என்று சொல்லி நம் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ரவி-ராஜா.
ஜி.ஆர். கோல்டு நிறுவனம் தயாரிக்கும் இப்படம் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக அமையும் என்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்.