Publish Date: Sat, 03 May 2008 (19:36 IST)
Updated Date: Sat, 03 May 2008 (19:36 IST)
'குரு என் ஆளு' மாதவன் நடிக்கும் புதிய படம். சென்னையில் படமாக்கப்பட்டு வந்த குரு என் ஆளு சில பாடல் மற்றும் காட்சிகளுக்காக ஸ்வீடன் சென்று வரவுள்ளது.
கே.ஆர்.ஜி. தயாரிக்கும் இப்படத்தில் மாதவனின் ஜோடியாக மம்தா நடிக்கிறார். ஜெயராம் ஒரு முக்கியமான கதாபாத்திரமேற்று நடிக்கவுள்ளார். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்வீடன் நாட்டு இயற்கை காட்சிகளை தன் கேமிராவில் அள்ளி வருவதற்கென செல்லும் யு.கே.எஸ். மற்றும் படக்குழு சென்னை திரும்பி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த உத்தேசத்துள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் குரு என் ஆளு மாதவனின் படங்களின் வரிசையில் பெயர் சொல்லும் ஒரு படமாக அமையும் என்பது குயக்குநர் செல்வா மற்றும் மாதவனின் எதிர்பார்ப்பு.