விஷால், நயன்தாரா நடித்து வெளிவரயிருக்கும் படம் சத்யம். ஏ. ராஜசேகரின் இயக்கத்தில் ஆர்.பி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்தப் படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் 25வது படம்.
விஷால் இதுவரை நடித்துள்ள படங்களின் பெயர்களை பல்லவியாக வைத்து ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ்.
இதுதவிர விஷால், நயன் பாடும் 'என் அன்பே' எனத் தொடங்கும் இளமையும், இனிமையும் பொங்கும் காதல் பாட்டுக்கு சாதனா சர்கமை பாடவைத்துள்ளார்.
இப்பாடல் பின்னணியில் ஹம்மிங் வேண்டுமென்ற எண்ணம் தோன்றிய ஹாரிஸ், ஜப்பானிலிருந்து மூன்று பின்னணிப் பாடகிகளை வரவைத்து ஹம் செய்யச் சொல்லி அசத்தியுள்ளார்.
குவார்ட்டர் செஞ்சுரி போடுவதென்றால் சும்மாவா?