Entertainment Film Featuresorarticles 0805 03 1080503036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவருக்காக...

Advertiesment
தேவயாணி திருமதி தமிழ்
, சனி, 3 மே 2008 (19:28 IST)
தலைப்பு ஏதோ சீரியல் தலைப்பு போல் உள்ளதா? விஷயமிருக்கிறது.

இராதே ஃபிலிம்ஸின் அடுத்த படம் திருமதி தமிழ். இப்படிச் சொன்னால் புரியாது. தேவயாணி தனது கணவன் ராஜகுமாரனை ஹீரோவாக்கும் முயற்சியில் உள்ளார்.

தனது இராதே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'திருமதி தமிழ் ' படத்தில் ராஜகுமாரனை ஹீரோவாக்குவதோடு தானும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார் தேவயாணி. மற்ற இரண்டு ஹீரோயின்களில் ஒன்று கீர்த்தி சாவ்லா. இன்னொருவராக சந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நாயகனுக்கு உதவும் நாயகியான தேவயாணி வழக்கறிஞர் ரோலில் அசத்தப் போகிறாராம்.

"கோலங்கள் அபியாகவே" மாறிவிட்டதால் தேவயாணி பற்றிய செய்திகள் என்றாலே சீரியல் சம்பந்தமான யோசனைகள்தான் வருகிறது. அதனால்தான் இந்த செய்தியின் தலைப்பும் இப்படி.

Share this Story:

Follow Webdunia tamil