"மொழி"க்குப் பிறகு ராதாமோகன் இயக்கிக் கொண்டிருக்கும் 'அபியும் நானும்' படத்துக்கு த்ரிஷாதான் நாயகி.
ஒரு பெண் குழந்தை பிறந்து, வளர்ந்து, கல்யாணம் ஆகிற வரையில் ஒரு தந்தைக்கு ஏற்படுகிற அனுபவங்கள்தான் கதை. பிரகாஷ் ராஜ் அழுத்தம் திருத்தமான, அதே சமயம் அன்பான அப்பா ரோலில் நடிக்கிறார். த்ரிஷா ஜோடியாக புதுமுகம் கணேஷ் அறிமுகமாகிறார்.
பள்ளி மாணவி, பின் கல்லூரி மாணவி என த்ரிஷா நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். வசனகர்த்தா விஜி இல்லாத குறையை தன்னுடைய உதவியாளர்கள் நாராயணன், சுப்பிரமணியன் மூலம் நிறைவு செய்துள்ளார் ராதாமோகன்.
பிருத்விராஜிக்கு கெளரவ வேடம். ப்ரீத்தாவின் ஒளிப்பதிவில் வரவிருக்கும் 'அபியும் நானும்' படத்துக்குப் பின்னர் மொழியின் இந்தி ரீ-மேக்கில் ஈடுபடவுள்ளார். அதன்பின்னர் ஒரு முழு நீள ஆக்சன் படம் பண்ணும் எண்ணத்தில் இருக்கிறார் ராதாமோகன்.