நகைச்சுவை நடிகர் செந்தில் தனது திரைப் பயணத்தில் ஆயிரமாவது படத்தை தொட்டுவிட்டார்.
ஆரம்ப காலத்தில் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டி, பின்னர் கவுண்டமனியோடு இணைந்து காமடி இரட்டையர்களாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சோலோவாகவும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் செந்தில்.
யாமினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எம். அருள்முருகன் இயக்கவிருக்கும் 'அன்றொரு நாள்' செந்திலுக்கு ஆயிரமாவது படம். ஜெயகிருஷ்ணா, பிந்தியா, மைதிலி என்ற புதுமுகப் பட்டாளங்களுக்கு மத்தியில் தனது ஆயிரத்தை நிறைவு செய்யும் செந்தில், நகைச்சுவை நடிகர்களில் மனோரமாவுக்குப் பிறகு ஆயிரம் படத்தில் நடிப்பவர் என்ற புதிய சாதனையும் இவரது கேரியரில் இணையவுள்ளது.
பாராட்டு விழா ஏதேனும் ஏற்பாடாகி உள்ளதா? படம் வருகையில் தெரியும்.