நேஹா ஓபராய்... தஸ் தஹானியா பட நாயகியான இவர், தற்போது 'உட்ஸ்டாக் வில்லா'வில் ரேஷ்மா கேரக்டரில் நடிக்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள இந்தப் படம் நேஹாவை சிகரத்திற்கு இட்டுச் செல்லப் போகிறதாம்.
அந்த அளவுக்கு தனது உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நேஹா முத்தக் காட்சிகளில் மட்டும் நடிக்க மறுக்கிறார்.
"கிளாமராக நடிக்க நான் தயார். எனது உடலமைப்பு கவர்ச்சிகரமானது என்பதால் கிளாமர் காட்டுவதில் தப்பில்லை. ஆனால் முத்தக் காட்சிகளில் நடிக்கவோ ஆபாசக் காட்சிகளில் நடிக்கவோ என்னால் ஆகாது'' என்று கண்டிப்பு காட்டும் நேஹா ஓபராய் அடுத்த படத்தில் சஞ்சய் தத்துடன் ஜோடி சேர்கிறார்.