இளம் நடிகர்கள் யாராவது நடிகையுடன் நெருக்கமாக நடித்திருந்தால் படம் வெளி வந்தவுடன் அந்த நடிகரை நோக்கி எழும் முதல் கேள்வி உங்களுக்கும் அவருக்கும் காதலாமே? என்பதுதான்.
மலைக்கோட்டைக்குப் பிறகு விஷாலிடமும் பிரியாமணியுடன் காதலா என்று கேட்டுள்ளனர். மலைக்கோட்டை வெற்றி விழாவில் பாவம் விஷால் புலம்பித் தீர்த்து விட்டார்.
"பிரியாமணியைக் காதலிக்கிறீர்களா? நயன்தாராவுடன் காதலா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் காதலிக்கிறேன்... ஆனால் அந்த இருவரையும் அல்ல" என்றவர், தனக்கு ரசிகர்களாகப் பார்த்துக் கொடுத்துள்ள புரட்சித் தளபதி பட்டத்திற்காக மெய் சிலிர்த்து நன்றி கூறினார்.
விஷாலின் காதலுக்கு சொந்தமான அந்த நபர் யார் என்பதுதான் இப்போது ஹாட் டாக்.