பஞ்சாப் ஜனனி புதுமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள படம் அலிபாபா.
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைச் சொல்வதுதான் அலிபாபாவின் கதை. கதாநாயகனாக அறிமுகமாகும் கிருஷ்ணா இயக்குநர் விஷ்ணு வர்த்தனின் தம்பியாவார்.
பிரகாஷ் ராஜ், திலகன், ராதாரவி, பிஜூ மேனன் ஆகியோர் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ளனர். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டாக்கிங் டைம் மூவீஸ் நிறுவனம் சார்பில் பட்டியல் சேகர் தயாரிக்கும் அலிபாபாவை இயக்கியுள்ளவர் இயக்குநர் நீலன் சேகர். ஆபாசங்களை மூலதனமாக்கிப் பணம் பார்க்க நினைக்காத நீலனின் முயற்சி பாராட்டுதலுக்குரிய ஒன்றுதான்.