நமீதாவைப் பார்ப்பதே 'ஜில்'லான விடயம். இதில் பனிமழை பொழியும் அரங்கில் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
இந்த ஜிலீர் அனுபவத்திற்குத் தயாராக உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடம் சென்னை தீவுத் திடல்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், ஸ்பெல் பவுண்ட் பொழுதுபோக்கு நிறுவனமும் இணைந்து தீவுத் திடலில் 20,000 அடி சதுர அடிப் பரப்பில் பனிமழை பொழியும் ஒரு பிரமாண்ட அரங்கை உருவாக்கியுள்ளனர்.
செயற்கை பனிப்பொழிவு, பனிக்கட்டி விளையாட்டு உள்ளிட்ட கேளிக்கை அம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை.
'ஸ்னோ பால்' எனப் பெயரிடப்பட்டு மே 1 முதல் ஜூன் 1 வரை நடக்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு நமீதாதான் தூதர். தூதர் என்ற முறையில் இங்கு வரும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்த நமீதா ரெடி.
நுழைவுக் கட்டணம் அதிகமில்லீங்க. குழந்தைகளுக்கு ரூ.100, பெரியவங்களுக்கு ரூ.150.
பி.குறிப்பு: (இந்தத் தூதர் பதவிக்காக ஒரு பெரும் தொகை நமீதாவுக்குத் தரப்பட்டுள்ளதாம்.)