இரவுப் பறவை ஏ.ஆர். ரஹ்மானிடம் ஒரு குறை உண்டு. அதுதான் தாமதம். ஆனால் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வாரோ அந்த அளவு இசையில் இனிமையும் வலிமையும் சேர்ப்பார் என்ற பெயரும் எடுத்தவர்.
குறைந்த நேரத்துக்குள் பாடல் வேண்டும் என்று கேட்டதற்கு பல படங்களை நிராகரித்துள்ளார். இதற்கு காரணம் நேரம் குறைந்தால் பாட்டின் தரமும் குறைந்துவிடும் எனும் தொழில் பக்தியே ஆகும்.
சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக அவசரகதியில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆல்பம் கேட்க மறுத்துவிட்டார் இந்த இசைப்புயல். எனது பாடல்கள் கேட்கும்போதே ஆடச்சொல்லும், சில பாடல்கள் கொஞ்சம் தாமதமாக மனதை வருடும்.
ஆனால், அவசர அவசரமாய் பாடலைப் பண்ணி கையில் கொடுத்துவிடுவது மட்டும் என்னால் எப்போதும் செய்ய முடியாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.