Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனிமையில் அகர்வால்!

Advertiesment
தனிமையில் அகர்வால்!
, வெள்ளி, 2 மே 2008 (16:58 IST)
பாரதிராஜாவின் R வரிசை நாயகிகளிலிருந்து சற்று மாறுதலாய் அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால். கமர்ஷியல் பஞ்சாமிர்தம் போட்ட பேரரசுவின் பழனியில் இவர்தான் ஹீரோயின்.

பழனி ஹிட்டாகி பரபரப்பா‌ய் ஓட அகர்வால் ராசியுள்ள நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றார். கோடம்பாக்கத்து சாஸ்திர சம்பிரதாயங்களின்படி தயாரிப்பாளர் கூட்டம் காஜல் வீட்டின் வரவேற்பரையில் காத்திருக்கத் தொடங்கியது.

என்ன நினைத்தாரோ அம்மணி அது இது, அப்படி இப்படி என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் அடங்கிய ஒரு லிஸ்டையே கையில் தூக்கி கொடுத்தார். பார்த்தது தயாரிப்பாளர் படை, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்துவிடுமோ என்று பயந்து எல்லோரும் எஸ்கேப்.

இப்ப சீந்துவாரும் இல்லாமல், ஏந்துவாரும் இல்லாமல், வாயால் கெட்டதாம் கெளதாரி என்ற கணக்கில் தனிமையில் இருக்கிறார் காஜர் அகர்வால்.

Share this Story:

Follow Webdunia tamil