Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம்: விசுவ இந்து பரிஷத்!

Advertiesment
தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம்: விசுவ இந்து பரிஷத்!
, வெள்ளி, 2 மே 2008 (10:46 IST)
''சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கம‌ல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தை வெளியிட விட மாட்டோம்'' என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ராமே‌ஸ்வர‌த்‌தி‌லவிசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லவழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கம‌ல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. ச‌ர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம்.

பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல `தீன்பிகார்' என்ற தீவை வங்கதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எ‌ன்றவேதா‌ந்த‌மகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil