ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தூதராகும் வாய்ப்பு முதலில் நயன்தாராவிற்குக் கிடைத்தது. நயனிடமிருந்து அந்த வாய்ப்பை த்ரிஷா தட்டிப் பறித்ததாக நயன் தரப்பு குமைய த்ரிஷா- நயன் நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இருவருமே தூதர் இல்லை என்ற நிலையில் தற்போது ஸ்ரேயா களமிறங்கியுள்ளாராம். பணம் வேண்டாம் வாய்ப்பு தந்தால் போதும் என்ற பாணியில் ஐ.பி.எல். ஐ அணுகுவதோடு நிற்கவில்லை ஸ்ரேயா.
மத்தியிலும் மாநிலத்திலும் செல்வாக்குப் பெற்ற ஆளும் சேனலின் பி.ஆர்.ஓ. மூலமும் பிரஷர் கொடுக்கிறாராம்.
இது ஒருபுறம் இருக்க ஐ.பி.எல். களத்தில் ஒரு சண்டைக் காட்சியை நடத்திக் காட்டுவேன் என்றபடி ஆர்யா வளம் வருகிறாராம். இதற்கான பகீரத முயற்சியிலும் அவர் இறங்கியிருப்பதாகத் தகவல்.
இது கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ஏறு முகமா? அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கு இறங்கு முகமா?