ஒரு வழியாக மலைக்கோட்டை 125 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா இல்லாமலா. வருகிற மே 1 ஆம் தேதி மியூசிக் அகாடமியில் 125 ஆவது நாள் விழா.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், ஏ.வி.எம். சரவணன், கே.ஆர்.ஜி., எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜ், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை வழங்குகின்றனர்.
படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.