Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வினயனின் தமிழ்ப் படம்!

Advertiesment
வினயனின் தமிழ்ப் படம்!
, புதன், 30 ஏப்ரல் 2008 (20:47 IST)
மலையாள இயக்குநர் வினயன் அடுத்து தமிழில் இயக்கும் புதிய படம் 'நாளை நமதே'. காசி, அற்புதத் தீவு போன்ற படங்களின் மூலம் தனக்கென தமிழில் தனியிடம் பிடித்த வினயனின் இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார்.

பீமா படத்தில் இடம்பெற்ற சனுஷாதான் கதாநாயகி. இரண்டு புதுமுகங்களை கதாநாயகர்களாக்கும் எண்ணத்தில் புதுமுக வேட்டையில் இறங்கியுள்ளார் வினயன். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்ய 'நாளை நமதே' வரவிருக்கிறது.

பழைய படங்களின் தலைப்பை பயன்படுத்தும் நமது தமிழ் இயக்குநர்களின் வியாதி மலையாள இயக்குநர் வினனயையும் விட்டு வைக்காதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆலையில் ஓடுவது அடிக்கரும்போ, நுனிக்கரும்போ நமக்குத் தேவை நல்ல வெல்லம்தானே!

Share this Story:

Follow Webdunia tamil