Publish Date: Wed, 30 Apr 2008 (20:41 IST)
Updated Date: Wed, 30 Apr 2008 (20:41 IST)
176 ஆண்டுகளுக்கு முன் ஒளியில் தோன்றி, மக்களுக்கு நன்னெறி காட்டிய வைகுண்டசாமியின் வரலாறு 'அய்யா வழி' என்ற பெயரில் படமாகிறது.
இப்படத்தில் "வானவெளி எங்கும் நாம் வாழ்வோம்" என்ற தேனிலவுப் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. புலமைப்பித்தன் இயற்றியுள்ள இப்பாடல் அய்யாவின் பக்தர்களாக வாழும் தம்பதிகளின் தேனிலவுப் பாட்டு.
இசையமைப்பாளர் பகவதி சிவநேசனும், மலேசியப் புதுப்பாடகி சாருமதியும் காதலாகி கசிந்துருகி பாடியுள்ளனர். பாடியபோது வந்துவிட்ட உருக்கம் எதார்த்தத்திலும் தொடர, இப்போது காதல் தம்பதிகளாகிவிட்டனர் சாருமதியும் சிவநேசனும்.
அடுத்த மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் அய்யா வழியில் வைகுண்டசாமியாக ராஜா நடிக்கிறார். நாயகன் சஞ்சய், நாயகி சுஜிபாலா.