Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமீருக்கு பாராட்டு விழா!

Advertiesment
அமீருக்கு பாராட்டு விழா!
, புதன், 30 ஏப்ரல் 2008 (20:36 IST)
"பருத்தி வீரன்" அமீருக்கு பல வகையிலும் பெருமை சேர்த்த படம். பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பிடத்தை பெற்றுத்தந்த படம். வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்று வாகை சூடிய படம்.

அந்த வரிசையில் அமீனா சினிமா பிரஸ் கிளப்பில் பாராட்டு விழா மேடையிலும் அமர்த்தி அழகுபார்க்கப் போகிறது. வருகின்ற மே 2 ஆம் தேதி ·பிலிம் சேம்பரில் நடைபெறவுள்ள விழாவில் விருதும், பாராட்டும் பெறப்போகிறார் அமீர்.

பாரதிராஜா விருது வழங்க, எஸ்.ஏ. சந்திரசேகர், இராம நாராயணன், ·பிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன், பாலுமகேந்திரா, அகத்தியன், சீமான், சேரன் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

சினிமா பிரஸ்கிளப் தலைவர் இரா.த. சக்திவேல் முன்னிலையில், கலைப்பூங்கா ராவணன் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளது. விழாவை கருணாஸ் தொகுத்து வழங்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil