தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ள கே.எஸ். ரவிகுமார் தசாவதாரத்தை தனது கேரியரில் ஒரு மைல் கல் என தெரிவித்துள்ளார்.
தசாவதாரம் முடிந்த கையோடு சரத்குமாரை வைத்து அடுத்த படம் இயக்குவதாக ஏற்பாடு. அதன்பின் விக்ரம் இரட்டை வேடமேற்கு நடிக்கப் போகும் படத்திற்கான பிள்ளையார் சூழி வேலைகளும் ஒரு பக்கம் நடந்தேறியபடி உள்ளதாம்.
இந்த இரட்டை வேடங்களும் ஒன்றையொன்று மிஞ்சுமளவிற்கு கதாபாத்திரங்கள் கூர்தீட்டப்படவிருப்பதாக கோடம்பாக்கத்து கோடங்கிகள் ஒலிக்கின்றன.
ஒரு வேடத்திற்கு நயன்தாரா, இன்னொரு விக்ரமிற்கு த்ரிஷா என பேச்சு அடிபடுகிறது. குருவி, கிரிக்கெட் வாய்ப்புகளில் போட்டிபோட்டு குமைந்து கிடக்கும் தோழிகளின் நட்பு சீயான் படத்தின் மூலம் புதுப்பிக்கப்படட்டுமே!