அஜந்தா, ராஜ்பா ரவிசங்கர் தயாரிப்பில் கதா.க. திருமாவளவன் இயக்கும் படம். படம் தொடங்கி ஒரு வருடம் கழிந்தும் இன்னும் ரிலீஸ் செய்தி அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.
தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காலதாமத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இடையிடையே இந்தப் பிரச்சனைகளால் தாமதம் ஏற்பட்டாலும் படம் மே மாதம் திரைக்கு வரலாம் என்ற செய்தியும் காற்றுவாக்கில் அடிபடுகிறது.
அஜந்தா இயக்குநர் திருமாவளவன் இளையராஜாவின் ரசிகர். ஏற்கனவே இசைஞானி முழுப்படத்தையும் போட்டு தனது "வேண்டுமடி நீயெனக்கு" படப் போஸ்டரை அமர்க்களப்படுத்தியவர்.
அஜந்தாவிலும் இளையராஜாதான் இசை. பண்ணைப்புரத்துக்காரர் மனது வைத்தால் அஜந்தாவை துரிதப்படுத்தி தஞ்சைக்காரரை கைதூக்கி விடலாம்.