Publish Date: Mon, 28 Apr 2008 (20:32 IST)
Updated Date: Mon, 28 Apr 2008 (20:32 IST)
"காதலானதே" படத்தின் இயக்குநர் எஸ். அரசகுமார் இயக்கும் புதிய படம் "தாவணி போட்ட தீபாவளி".
படத்தின் தலைப்புக்கு தலையை போட்டு உடைத்துக் கொள்ளாமல் பாடல் வரிகளை தலைப்பாக்கும் உத்தியை கடைபிடித்துள்ள அரசகுமார், "ஒரு தாதாவிற்கும், சமூக சேவை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான்" தா.போ.தீ. என்கிறார்.
ஏ.ஏ.ஆர். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீரஞ்சனும், நாயகியாக மதுசந்தாவும் நடிக்கின்றனர்.
மனிதனாய் பிறந்த எந்த ஒருவனும் ஏதாவது ஒரு பொதுநல சேவையில் ஈடுபட வேண்டும் என்பதைச் சொல்வதுதான் தாவணி போட்ட தீபாவளியின் மையக் கருவாம்.