பாவலர் வரதராஜன் எழுதி, இளையராஜா இசையமைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மூச்சுவிடாமல் பாடிய பாடல் "மண்ணில் இந்தக் காதலின்றி" கேளடி கண்மணி படத்தில் இந்தப் பாடல் வந்தபோது எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடுகிறாரா என்பதை கண்ணிமைக்காமல் காது கொடுத்துக் கேட்ட ரசிகர்கள் அநேகம்.
அந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக மூச்சுவிடாமல் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவமயம் படத்தில் இயக்குநர் சஞ்சய்ராம் எழுதியுள்ள 'ஷேதித்ரம்'... என்று தொடங்குகிற பாடலை எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடியுள்ளார்.
அப்போது 'கேளடி கண்மணி' பாடல் பதிவின்போது இயக்குநர் வசந்த் "முடிந்தால் பாடுங்கள். இல்லையென்றால் விடுங்கள் பரவாயில்லை" என்று சொன்னதற்கு, "முடிந்தால் பாடுகிறேன் இல்லாவிட்டால் மூச்சையே விட்டுவிடுகிறேன்" என்று பாடிக்காட்டிய எஸ்.பி.பி.யின் இந்த ஷேத்திரம் பாடலும் ரசிகர்களின் காதுகளில் தேன் பாயும்.