Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்சென்ட் அம்மணி!

Advertiesment
உதயபானு மகேஷ்வரன் டெய்சி சக்கர வியூகம்
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (20:27 IST)
இப்போதெல்லாம் படங்கள் குறித்த நேரத்தில் முடிகிறதோ இல்லையோ நாலு பிரச்சனை, இரண்டு பஞ்சாயத்து என்றபடிதான் முடிகிறது.

டைரக்டர் - தயாரிப்பாளர், டைரக்டர் - நடிகர், நடிகை, டைரக்டர் - இசையமைப்பாளர் ஏதாவது ஒரு ஜோடிக்குள் புகைச்சல் கிளம்பி அது பூகம்பமாகி படக்குழுவை பாடாய் படுத்திவிடுகிறது.

இயக்குநர் உதயபானு மகேஷ்வரன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இவரது சக்கர வியூகம் படத்தின் ஹீரோயின் டெய்சிக்கும் இவரு‌க்கு‌ம் முட்டல் மோதல்.

பாக்கியுள்ள சில காட்சிகளை கூட எடுக்க முடியாமல் அம்மணி போக, நாயகி இல்லாமலேயே அந்தப் பாட்டு அரங்கேறியுள்ளது. ஆடியோ ஃபங்ஷனுக்கும் டெய்சி ஆப்சென்ட். ஏக கோபத்தில் நறநறக்கிறதாம் இயக்குநர் தரப்பு.

கார்த்திக் ராஜா இசையில் மே 1 ஆம் தேதி வெளியாகப் போகும் சக்கர வியூகம் இதுபோன்ற தடைகளை தகர்த்து வெற்றிபெற்றால் சரி.

Share this Story:

Follow Webdunia tamil