ஒரு படம் முடிந்து அடுத்த படம் தொடங்க இயக்குநர்கள் மட்டுமல்ல இளம் கதாநாயர்களும் படாதபாடு படுகிறார்கள்.
பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' படத்தில் புதுமகமாக அறிமுகமான அகில் சற்றே நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'வால்மீகி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இளையராஜாவின் இசையில், அனந்தநாராயணன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் மூலம் தனக்கொரு புதிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், அகிலுக்கு கேரளத்து நடிகை மீரா நந்தன் கதாநாயகி.
சிவாஜி - எம்.ஜி.ஆர்., கமல் - ரஜினி, அஜித் - விஜய் இந்த இரட்டையர்களின் காலகட்டங்களுக்குப் பின் இளந்தலைமுறை ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து போட்டியும் அதிகமானால் அது திரையுலகுக்கு நன்மைதானே!