சூர்யா தனது வாயாரப் புகழ்வதற்கும், மனதார வாழ்த்துவதற்கும் ஒரு லிஸ்டே வைத்துள்ளார். திரைக் கலைஞர்கள் முதல் அரசியல் பிரமுகர் வரை அந்த வாழ்த்துப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவரது அகரம் ஃபவுண்டேஷன், குழந்தை கல்வி அவசியத்திற்காய் செய்திப்படமொன்றை தயாரித்து வருகிறது. அதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவை எண்ணி சூர்யா ஆச்சரியத்தில் இருக்கிறார்.
அனுமதி தந்ததோடு மட்டுமில்லாமல் கல்வி நிலை பற்றிய புள்ளி விவரங்களை அள்ளிக்கொடுத்த கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது படக்குழுவையும், கேமராவையும் தந்துள்ள மணிரத்னம், தனது யூனிட்டை தந்து உதவயுள்ள ராஜீவ் மேனன், சம்பளம் வாங்காமல் மும்பையிலிருந்து வந்து பணியாற்றும் மேக்அப்மேன்.
நடிகர்கள் விஜய், மாதவன், அடுத்ததாக பட தேதிகளை சரிக்கட்டி நடித்துத்தரக் காத்திருக்கும் அஜித், ப்ரியா வி. டைரக்சனில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனது துணைவியார் ஜோதிகாவும் நடிக்கும் இந்தப் செயதிப் படம் குறித்து நிறைய நிம்மதியிலும், மகிழ்ச்சியிலும் உள்ளார் மார்க்கண்டேயர் வாரிசு. வெல்டன் சார்.