Publish Date: Mon, 28 Apr 2008 (16:01 IST)
Updated Date: Mon, 28 Apr 2008 (16:00 IST)
பாலாவின் 'நான் கடவுள்' மாதமொரு மேனியாகவும், வருடமொரு வண்ணமாகவும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
எப்போது நம்மை வெளியே விடுவார் என்று தெரியாமல் மிரண்ட கண்களுடன் ஆர்யாவும், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிட் பிட் நீயூஸாப் போடப் போறோம்னு தெரியலையே என்ற புலம்பலுடன் பத்தி சினிமா நிருபர்களும் அல்லாட, பாலா மெல்ல அடிமேல் அடிவைத்து சென்றபடி.
"நான் கடவுள் படத்தில் ஒரு சீனாம்" என்று யாராவது சொல்ல ஆரம்பித்தால் "நிறுத்துப்பா ரிலீஸ் எப்போ அதைமட்டும் சொல்லு" என ஆத்திரம் கொள்கிறது ரசிகர் தரப்புகள்.
இருந்தாலும் லேட்டஸ் நியூஸ் என்னவென்றால், ஏறக்குறைய முடிந்துள்ள இப்படத்தில் இளையராஜா ஒரு ரீமிக்ஸை போட்டு தகர்த்துள்ளாராம். அந்தப் பாடல் "மாதா உன் கோவலில் மணி தீபம் ஏற்றினேன்".