Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீயானின் சிறந்த பணிகள்!

Advertiesment
சீயானின் சிறந்த பணிகள்!
, சனி, 26 ஏப்ரல் 2008 (20:22 IST)
கொஞ்சமாக உதவிகள் செய்தாலும் அதை வெளிச்சம் போட்டுக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்து தன்னை பாரி வள்ளலாக காட்டிக் கொள்கிற நடிகர்களுக்கு மத்தியில் எந்தவித விளம்பரமும் செய்துகொள்ளாமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சீயான் விக்ரம். திரையுலகில் மிகவும் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்.

எத்தனையோ படங்களில் நடித்தும் மக்கள் மனதில் பளிச்சென்ற தெரிய வைத்த படம் சேது. இயக்குனர் பாலாவின் முதல் படம். அதற்குப் பின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடல் எடையைக் குறைத்தும், கூட்டியும் இயக்குனர்களின் பாராட்டைப் பெற்றார்.

'பிதாமகன்' படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் வெட்டியான் கேரக்டரில் முகத்தை கொடூரமாக்கியும் நடித்தார். தற்போது 'கந்தசாமி' படத்துக்காக கடுமையான உடற்பயிற்சி மூலம் கட்டுடலாக்கிக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரின் போராட்டம், உழைப்பு, விடாமுயற்சி, வறுமை என்று ஒன்று விடாமல் அவரின் வாழ்க்கையை அவரின் ரசிகர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலும், அவர்களுக்காக உதவ 'தி விக்ரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். வாழ்த்துகள் விக்ரம். உங்கள் பணி தொடரட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil