Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சியத் தயாரிப்பாளர்!

Advertiesment
லட்சியத் தயாரிப்பாளர்!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (18:57 IST)
'அரசாங்கம்' விஜயகாந்த் நடிக்க, ஆர். மாதேஷ் இயக்க, விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பாக சுதீஷ் தயாரித்தார்.

இதன் படப்பிடிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு, மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. அரசியல், ஆக்சன் என்று கலந்துகட்டி விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த படமாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மீசை மாதவன்' ஆகிய படங்களைத் தயாரித்த யுவஸ்ரீ பிக்சர்ஸ் எஸ்.வி. தங்கராஜ் தயாரிக்கும் படம் 'எங்கள் ஆசான்'. இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றாலும், ஆங்காங்கே விஜயகாந்த் ஸ்டைலில் 'பஞ்ச்' டயலாக்குகள் படத்தில் உண்டு.

இப்படத்தின் இயக்கம் கலைமணி. இசையை சபேஷ்-முரளி கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவை ஏ. வெங்கடேசும், எடிட்டிங்கை வேலுமணி கவனிக்கிறார்கள்.

இன்று முதல் படப்பிடிப்பைத் தொடங்கி நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் திரையிட திட்டமிட்டிருக்கின்றனர். இதன்மூலம் விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எஸ்.வி. தங்கராஜின் லட்சியம் நிறைவேறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil