என்னதான் நல்ல கதையாக இருந்தாலும், பெரிய ஹீரோ நடித்தாலும் வெளிநாட்டு விஷயங்களையும், அங்குள்ள டெக்னீஷியன்களை பயன்படுத்தி படத்திற்கு மேலும் பரபரப்பை உண்டாக்குவதில் நம் சினிமா ஆட்கள் சளைத்தவர்கள் இல்லை.
கதையைப் பற்றி வெளியே சொல்லி மக்களை பேச வைப்பதைவிட, இதுபோன்ற விஷயங்கள் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.
'அவ்வை சண்முகி' படத்தில் கமலுக்கு மேக்கப் போட பிரபல ஹாலிவுட் மேக்கப்மேன் வரவழைக்கப்பட்டார். அதுவும் அவருக்கான ஒரு நாள் சம்பளத்தை கேள்விப்பட்டே மக்கள் அதிசயித்தனர்.
அதேபோல், தற்பொழுது அஜித் நடிக்கும் 'ஏகன்' படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் பேசப்பட வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ரிங்சான் என்பவரை வரவழைத்து சண்டைக் காட்சிகளை மெய்சிலிர்க்க எடுத்து வருகிறார்கள்.
பெரிய ஹீரோக்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் தமிழில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம். இவரின் மகன் விஜய சிரஞ்சீவி - கீர்த்தி சாவ்லா நடிக்கும் படம் 'சூர்யா'. இப்படத்திற்கான சண்டைக் காட்சிக்காக ஹாலிவுட் பாணியில் 46 கேமராக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களை வைத்தும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இதேபோல் விக்னேஷ் நடிக்கும் 'குடியரசு' படத்திலும் ஜப்பான் பாணியான சண்டை காட்சிகளை எடுத்து வருகின்றனர்.