Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர். ரஹ்மான் பாணியில் யுவன்!

Advertiesment
ஏ.ஆர். ரஹ்மான் பாணியில் யுவன்!
, வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:39 IST)
அவ்வளவு சீக்கிரம் டியூன் போட்டுக் கொடுக்க மாட்டார் ஏ.ஆர். ரஹ்மான். தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் மகன் கலாபிரபு இயக்க, பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் படம் 'சக்கரைக்கட்டி' படப்பிடிப்பு அனைத்தும் முடிவு பெற்று, எடிட்டிங் வேலைகள் முடிந்துவிட்ட நிலையிலும் ஒரு பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கலா பிரபு.

அப்படி தாம‌தித்து கொடுப்பது கூட படத்திற்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் என்று நினைக்கும் இயக்குனரகளும் உண்டு.

தற்போது மனைவியை விவாகரத்து செய்ததன் மூலம் மன உளைச்சல் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தவித்து வருகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அனைவரிடமும் கலகலப்பாக பேசி சிரிக்கும் யுவன், தற்போது மிகவும் நெருங்கிய நண்பர்களிடம் கூட குறைவாகத்தான் பேசி வருகிறார்.

இந்நிலையில், டியூன் போடுவதற்கான மன நிலையில் இல்லாத பட்சத்தில் ஒப்புக்கொண்ட படங்களுக்காவது போட்டுக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக அவ்வப்போது, 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஏகன்', 'சிலம்பாட்டம்', 'சர்வம்' ஆகிய படங்களுக்கு மட்டும் டியூன் போட்டுக் கொண்டிருக்கிறார்.

மனநிலை சரியில்லாமல் இருந்தாலும் இசையில் அசத்தப் போகிறார் என்பது இந்தப் படங்கள் வெளியானதும் தெரியத்தான் போகிறது.

Share this Story:

Follow Webdunia tamil