கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடைசியாக அவர் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டு தற்போது முடித்துள்ள படம் 'தசாவதாரம்'.
இதன் பாடல் வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஜாக்கி சான், அமிதாப் பச்சன், மல்லிகா ஷெராவத் போன்ற பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
மிகவும் குறுகிய காலத்தில் தரமான படங்களை எடுக்கக் கூடியவர் என்று கே.எஸ். ரவிக்குமார் பெயர் பெற்றாலும், இந்தப் படத்திற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளும் கமலுடன் ஏற்பட்டது. அதனாலும் சற்று தாமதம் ஆனது.
இதற்கிடையே சூர்யாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைப்பதற்காக கதை கேட்டுக்கொண்டிருந்தார். அத்தோடு சரத்குமாரை வைத்து மிகப் பிரமாண்டமான ஒரு படத்தை இயக்கிக் கொடுக்க பிரபலமான கம்பெனி அணுகியது.
தற்போது, மோகன் நடராஜன் ஏற்கனவே பலமுறை தனக்கு ஒரு படம் இயக்கித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில் 'தசாவதாரம்' படத்தின் ஆடியோ ரிலீஸுக்குப் பின் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். மோகன் நடராஜன்தான் தயாரிப்பாளர்.
இப்படி 'தசாவதாரம்' படத்தால் நான்கு படங்களை இயக்கும் வாய்ப்பை அன்போடு மறுத்தார் கே.எஸ். ரவிக்குமார்.