சமீபத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் 'வணக்கம்மா' என்றொரு படத்திற்கான பூஜை போடப்பட இருந்தது.
இதன் விளம்பர போஸ்டர்களில் ஹனுமாரும், ராமரும் சிறுநீர் கழிப்பது போலவும், தண்ணியடிப்பது போலவும் படங்கள் இருக்க, இந்த படத்திற்கான பூஜை போடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பினர் கொடி, கோஷங்களுடன் ஏவி.எம். நோக்கி வர, பட பூஜை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், குருவி படத்தின் சர்ச்சைக்குரிய தில்லையாடி வள்ளியம்மை என்று வரும் பாடல் வரியை எழுதியிருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பா. விஜய். அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி.
ஆக, இவையெல்லாம் ஒன்று சேர, இதை பெரிதுபடுத்த நினைக்கிறார் ஜெயலலிதா. சும்மாவே மெல்லும் வாயில் அவலைக் கொட்டினால் உம்மென்று இருக்குமா?