அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் தற்போது நமீதாவும் சிக்கிக்கொண்டார். சரத்குமாருடன் 'சாணக்யா' படத்தில் நடித்ததற்குப் பிறகு 'மூத்த நடிகர்களோடு இனி நடிக்கமாட்டேன்' என்று அறிக்கை விட்டதன் மூலம் அவர்களின் கோபத்திற்கு ஆளானார்.
அதன்பிறகு கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'மானாட மயிலாட' டான்ஸ் புரோக்ராமில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக வருகிறார் என்று மாதர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கண்டன கோஷங்கள் எழுப்ப, நமீதாவுக்கு ஆதரவாக 'நமீதா மெல்லிய ஆடை உடுத்துதிக்கொண்டுதான் வருகிறார்' என்று டான்ஸ் மாஸ்டர் கலா அறிக்கை விட்டார்.
தற்போது 'பில்லா' படத்தில் நமீதா, நயன்தாரா இருவரும் நடித்தனர். ஒரு காட்சியில் நமீதா 'டூ பீஸ்' உடையில் கடற்கரையில் குளிப்பது போல் நடித்ததால் அவரைப பற்றியே அதிகம் பேசப்பட்டதால், நயன்தாரா கடுப்பானர்.
அவர் கடுப்பான விஷயம் நமீதாவுக்குத் தெரிய வர, என்னைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்று நயன்தாராவை நேரடியாக தாக்காமல் மறைமுகமாக போர் தொடுத்து வருவதால்... மற்ற நடிகைகளும் நமீதா மீது கோபத்தில் உள்ளனர்.