Entertainment Film Featuresorarticles 0804 23 1080423043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு தொடர்கதை திரைப்படமாகிறது!

Advertiesment
அகராதி வர்னிகா மூவி மேக்கர்ஸ்
, புதன், 23 ஏப்ரல் 2008 (20:11 IST)
வர்னிகா மூவி மேக்கர்ஸ் சார்பில் வரத் தயாரிக்கும் படம் 'அகராதி'. இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோ புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

'கலாபக் காதலன்', 'திமிரு' ஆகிய படங்களில் நடித்த புவன் - மோனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் தொடக்க விழாவில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். இவர் ராணி வார இதழில் வெளியான 'இரவில் ஒரு வானவில்' தொடர்தான் சின்னச் சின்ன மாற்றங்களுடன் 'அகராதி' திரைப்படமாக வளர்ந்து வருகிறது.

இப்படப் பூஜையில் பாக்யராஜ், நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன், பாக்கெட் நாவல் அசோகன், இப்படத்தின் இசையமைப்பாள்ர சுந்தர் சி. பாபு, ராசி அழகப்பன் மற்றும் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து மோனிகா பங்குபெறும் காட்சியும் படமாக்கப்பட்டது. வந்திருந்த அனைவரையும் இப்பட இயக்குனர் நாகா வெங்கடேஷ், தயாரிப்பாளர் வரத் ஆகியோர் வரவேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil