தனுஷ் நல்ல கதைகளைத் தேர்வு செய்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதற்குக் காரணம் மாமனார் ரஜினியின் ஆலோசனைதான்.
'திருவிளையாடல் ஆரம்பம்', 'பொல்லாதவன்', தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'யாரடி நீ மோகினி' படம் வரை நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறோர் தனுஷ்.
தனுஷின் படங்கைளத் தொடர்ந்து கூர்ந்து பார்த்து வரும் ரஜினி, தனுஷிடம் நடிப்பில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவார். எப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் தனுஷிற்குப் பொருத்தமாக இருக்கும் என்பது வரை ஆலோசனை சொல்வார்.
ரஜினி பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடித்து வெற்றிபெற்ற 'பொல்லாதவன்' பட டைட்டிலைப் பெற்றுத் தந்ததோடு, அப்படத்தின் கதையைக் கேட்டு நடிப்பில் பல டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார்.
அதேபோல 'யாரடி நீ மோகினி' படத்தின் வசூலைப் பற்றியும் ஆர்வமாக கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும், தான் நடித்து வெற்றிபெற்ற படங்களின் டைட்டில்களைத் தன் மருமகன் நடிக்கும் படங்களுக்கு வைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்.
'பில்லா', 'தம்பிக்கு எந்த ஊரு' படங்களின் டைட்டில்களை ஒன்று அஜித்திற்காகவும், மற்றொன்றை லாரன்சிற்காகவும் விட்டுக் கொடுத்தவ்ர், இனி தனது பட டைட்டில்களைத் தானே மீண்டும் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
தனுஷ் நிச்சயம் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு வருவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, சூப்பர் ஸ்டாருக்க இருக்கிறது. அதற்காகத்தான் பல ஆலோசனைகளையும் அக்கறையுடன் கொடுத்து வருகிறார்.