Entertainment Film Featuresorarticles 0804 22 1080422059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஜாக்கி சான்!

Advertiesment
ஜாக்கி சான் தசாவதாரம்
, செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (20:01 IST)
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய 'தசாவதாரம்' கேசட் வெளியீட்டுக்கு ஏற்கனவே இரம்ணடு முறை வருவதாகச் சொல்லி தேதிகள் அறிவிக்கப்பட்டு பின் தள்ளிப் போடப்பட்டது.

தமிழில் குறிப்பிட்டு சொல்லப்படும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், ஹீரோ உலகநாயகன், தயாரிப்பு ஆஸ்கார் ஃபிலிம்ஸ். இவ்வளவு பெரிய பிரமாண்ட தயாரிப்பில் உருவான படத்தின் பாடல் கேசட்டை ஜாக்கி சான் வெளியிட்டால் தமிழ் சினிமாவே வாயைப் பிளக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் நினைத்தார்.

முதல் முறை தேதி கொடுத்த ஜாக்கி சான், சொந்த வேலை காரணமாக தள்ளிவைத்தார். இரண்டாம் முறை பாதுகாப்பு காரணமாக வரத்தயங்கினார்.

ஆனால், ஆஸ்கார் ரவிச்சந்திரன் விடாப்பிடியான முயற்சியும், அணுகுமுறையும் ஜாக்கி சானுக்குப் பிடித்துப் போக, வரும் 25 ஆம் தேதி விழாவுக்கு வருவதாக சம்மதித்து உள்ளார்.

இதில் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil