சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபிராமி மெகா மால் புதியதாக தியேட்டர் கட்டப்பட்டுள்ளது. இது சாதாரண சினிமா தியேட்டர் என்று இல்லாமல் ஷங்கர் பட பாடல் காட்சிக்கான 'செட்' போல மிகவும் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஸ்வர்ண சக்தி அபிராமி என்ற பெயருக்கேற்ற மாதிரி கொலிக்கின்றன.
இந்தியாவின் இரண்டாவது ஐந்து நட்சத்திர தியேட்டர் என்ற பெருமையைப் பெற்ற அபிராமி மெகாமால் இந்திய புதிய தியேட்டர் மூலம் மேலும் சிறப்பு சேர்த்துக்கொள்கிறது. அமெரிக்கா love bug என்ற இருக்கை படுக்கையாக மாற, படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதி. உள்ளே சென்று பார்த்தால் சீன மன்னரின் மாளிகை போல மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனும், மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் திறந்து வைத்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், சினிமா படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிக-நடிகையர் என அமர்க்களமாக நடந்து முடிந்தது. இத்தனை வசதிகள் இருப்பதால் டிக்கெட்டின் விலையும் கூடுதலாகத்தான் உள்ளது. காசுக்குத் தகுந்த பணியாரம் என்று கிராமங்களில் சொல்வது போல்... வசதி படைத்தவர்களுக்கான தியேட்டர் இது என்றால் மிகையல்ல.